அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்துத்துறை அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, தலைமையில் இன்று (06.10.2025) நடைபெற்றது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தை மேம்படுத்தவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 முதல் 12 வரை தகவல் அறியும் உரிமை வாரம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வாரத்தில் பொது மக்கள் / அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணிகள் / சிறு கூட்டங்கள், விவாதங்கள், மராத்தான் ஓட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, அறிவுறுத்தினார்.










Leave a Reply