கோவை மாநகர வட்டம் நகரிக்கோட்டம் தண்ணீர் பந்தல் பிரிவு அலுவலக த்தில் உள்ள 33 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு பணியில் மின்பாதை ஆய்வாளர் சிவகுமார் இருந்துள்ளார்.
இவர் பணி நேரத்தின் போது அலுவலகத்திற்குள் மது அருந்திவிட்டு உடன் பணியில் இருந்த ஊழியர்களிடம் போதையில் அலுவலர்களை தகாத வார்த்தையால் திட்டியும், இரவு நேரத்தில் அலுவலகத்தில் நிர்வாண பூஜை செய்ய போவதாகவும் எலுமிச்சம்பழம் முட்டை ஆகிவை கொண்டு மாந்திரீகம் செய்து அனைவரையும் காலி செய்து விடுவதாக மதுபோதையில் இரவு முழுவதும் ஆட்டம் போட்டு உள்ளார்.
இவ்வாறு இரவு நேர பணி என்பது மின்தடை ஏதும் ஏற்படாத வகையில் தொடர்ந்து விழிப்போடு மின்சப்ளை கண்காணிக்க வேண்டிய நேரடி பொறுப்பு உள்ள சூழ்நிலையில் மது போதையில் இரவு நேரத்தில் தகாத வார்த்தைகளை பேசி அனைவரையும் மிரட்டும் வகையில் நிர்வானமாக பூஜை செய்வதாக கூறிய மின் பாதை ஆய்வாளர் சிவகுமாரை வாரியம் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா. லோகு வலியுறுத்தியுள்ளார்.










Leave a Reply