மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடைகளை அகற்றித் தரக் கோரி தேசத்தந்தைமகாத்மா காந்தி சிலை இடம் கோரிக்கை மனு கொடுத்தனர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்பேருந்து நிலையம் சுற்றிலும் உள்ள மதுபான கடைகளை (டாஸ்மார்க்)அப்பகுதியில் இருந்து முழுமையாக அகற்றி தரக் கோரி துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டுவந்த நிலையில் நீண்ட ஆண்டு காலமாக எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் அமைந்துள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலைக்கு மனுக்களை நம்ம மேட்டுப்பாளையம் பொதுமக்கள் மற்றும் நம்ம மேட்டுப்பாளையம் சமூக நல குழுவினர் ஒன்றிணைந்து சிலை இடம்மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தின் போது மதுவால் ஏற்படும் தீமைகளையும் அதால் ஏற்படும் உடல் பாதிப்பையும் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அதன் பின் மதுவில்லாத நாடாக மாறுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.