தமிழக பாஜக தலைவர்களில் வித்தியாசமான முறையில் அரசியல் செய்து அடிமட்ட தொண்டர்களையும் தன் பெயரை உச்சரிக்க வைத்தவர் தான் அண்ணா மலை!
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபி-க்கு வெற்றியை ஈட்டித் தராத காரணத்தால் இருக்கின்ற மாநில தலைவர் பதவியும் போய் அரசியல் அரங்கில் உலா வருகிறார்.
தமிழக மாநில தலைவர் பதவி போனால் என்ன? இவருக்கு மத்திய அமைச்சரவையிலோ, அல்லது ஏதேனும் ஒரு மாநிலத்தில் கவர்னர் பதவியோ கிடைத்துவிடும் என்று பலராலும் பேசப்பட்டார். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஆகிவிட்டார். அண்ணாமலைக்கு இன்னும் ஒரு பொறுப்பு கூட வழங்கப்படவில்லை. ஏன்? எதற்கு?? என்று அக்கட்சி தொண்டர்களால் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் தன் கட்சித் தொண்டர்களிடம் மதிப்பு குறையாமல் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை அரசியல் விமர்சகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.










Leave a Reply