காட்பாடியில்  தனியார் விடுதியில் அதிரடி கஞ்சா வேட்டை -விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் கைது!

வேலூர், ஜன. 21-
வேலூர் மாவட்டம், காட்பாடி  விஐடி (VIT) பல்கலைக்கழகம் அருகே உள்ள தனியார் விடுதியில் ( கிளவுட் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் ) போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த விஐடி பல்கலைக் கழக மாணவர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா ஆயில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம், பிரம்மபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கிப் பயிலும் விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும், பதுக்கி வைத்திருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில்,   போலீசார், விஐடி பல்கலைக்கழகம் அருகிலுள்ள  தனியார் விடுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின் போது  (கிளவுட் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் ) விடுதியில் தங்கி இருந்த மாணவர்களிடமிருந்து அதாவது அந்த அறைகளிலிருந்து பின்வரும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவை 500 கிராம் கஞ்சா,
53 போதை மாத்திரைகள்,
250 மில்லி கஞ்சா ஆயில் ஆகியவை ஆகும்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், போதைப்பொருட்களை பதுக்கியதாக விஐடி பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு பயிலும் 7 மாணவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களின் விபரம் வருமாறு:
(1) ஆயுஷ் சுக்லா (21) – மீரட், உத்தரப் பிரதேசம்.
(2) கேசவ் (21) பிவானா, ஹரியானா.
(3) தேவ் சிங் (21) – காசியாபாத், உத்தரப் பிரதேசம்.
(4) ஈஸ்வர் சரண் (21) – கொண்டாப்பூர், ஹைதராபாத்.
(5) ஆதர்ஷ் (21) – கிரேட்டர் நோய்டா, உத்தரப் பிரதேசம்.
(6) ஆதித்ய பிரதான் (21) – வைபவ் நகர், காட்பாடி.
(7) ஷிபான் – செல்வம் நகர், காட்பாடி.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது பிரம்மபுரம் காவல் ஆய்வாளர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்துள்ளார். இவர்கள் மீது போதைப்பொருட்கள் தடுப்புச் சட்டம் (NDPS Act – 8(c), 20(b)(ii)(B)) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS – 111, 123) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. (Cr.no.09/26). கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் தொரப்பாடி மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 மாணவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் காட்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காட்பாடியில் தனியார் விடுதியில் அதிரடி கஞ்சா வேட்டை –
விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் கைது!
வேலூர், ஜன. 21-
வேலூர் மாவட்டம், காட்பாடி விஐடி (VIT) பல்கலைக்கழகம் அருகே உள்ள தனியார் விடுதியில் ( கிளவுட் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் ) போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த விஐடி பல்கலைக் கழக மாணவர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா ஆயில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம், பிரம்மபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கிப் பயிலும் விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும், பதுக்கி வைத்திருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், போலீசார், விஐடி பல்கலைக்கழகம் அருகிலுள்ள தனியார் விடுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின் போது (கிளவுட் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் ) விடுதியில் தங்கி இருந்த மாணவர்களிடமிருந்து அதாவது அந்த அறைகளிலிருந்து பின்வரும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவை 500 கிராம் கஞ்சா,
53 போதை மாத்திரைகள்,
250 மில்லி கஞ்சா ஆயில் ஆகியவை ஆகும்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், போதைப்பொருட்களை பதுக்கியதாக விஐடி பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு பயிலும் 7 மாணவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களின் விபரம் வருமாறு:
(1) ஆயுஷ் சுக்லா (21) – மீரட், உத்தரப் பிரதேசம்.
(2) கேசவ் (21) பிவானா, ஹரியானா.
(3) தேவ் சிங் (21) – காசியாபாத், உத்தரப் பிரதேசம்.
(4) ஈஸ்வர் சரண் (21) – கொண்டாப்பூர், ஹைதராபாத்.
(5) ஆதர்ஷ் (21) – கிரேட்டர் நோய்டா, உத்தரப் பிரதேசம்.
(6) ஆதித்ய பிரதான் (21) – வைபவ் நகர், காட்பாடி.
(7) ஷிபான் – செல்வம் நகர், காட்பாடி.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது பிரம்மபுரம் காவல் ஆய்வாளர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்துள்ளார். இவர்கள் மீது போதைப்பொருட்கள் தடுப்புச் சட்டம் (NDPS Act – 8(c), 20(b)(ii)(B)) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS – 111, 123) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. (Cr.no.09/26). கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் தொரப்பாடி மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 மாணவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் காட்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழக முழுவதுமே இது போன்ற கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பயன்படுத்திய வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் முகத்தை காட்டச் சொல்லி காவல் துறையில் உள்ள அதிகாரிகள் முதல் அடிமட்ட இரண்டாம் நிலை காவலர்கள் வரை குற்றவாளிகளை டார்ச்சர் செய்து அவர்களது முகத்தை வெளியில் தெரிய வைத்து புகைப்படம் எடுத்து அதை ஊடகங்களில் வெளியிட செய்கின்றனர். இப்படி பொதுமக்கள் என்றால் அவர்களை சித்திரவதை செய்து துன்புறுத்தி அவர்கள் விருப்பத்திற்கு மாறாக அவர்களது புகைப்படத்தை ஊடகங்களில் ஒளிபரப்பச் செய்கின்றனர். அச்சு ஊடகங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். இவ்வாறு நடைமுறையில் உள்ளது என்று கேட்பவர்களுக்கு கூலாக பதில் சொல்கின்றது காவல்துறை. ஆனால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் உள்ள விஐடி பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் 7 பேர் போதை பொருட்களை பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களை முகம் தெரியாமல் முகங்களை மறைத்து அவர்களை பாதுகாப்பாக பிரம்மபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர் முதல் இரண்டாம் நிலை காவலர் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று ஊடகங்களுக்கு அவர்களது முகத்தை காட்டாமல் இருட்டடிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. சட்டம் என்றால் அனைவருக்கும் சமம்தானே. பரதேசி முதல் பணக்காரர் வரை ஒரே சட்டம் தான் நடைமுறையில் உள்ளது. சிவில் சட்டம் நடைமுறையில் உள்ள இந்த காலகட்டத்தில் பிரம்மபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றுவோர் அனைவரையும் சமமாக நடத்தாமல் இப்படி பிரிவினை செய்துள்ளது காட்பாடி பகுதியில் பெரும் பேசு பொருளாக உலா வந்து கொண்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. விஐடி பல்கலைக் கழகத்தில் எது நடந்தாலும் அதை மூடி மறைப்பதிலேயே காவல்துறை குறியாக உள்ளது. இதற்கு அடிப்படை காரணம் என்னவென்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்றே சொல்லலாம். இனிவரும் காலங்களிலாவது பொதுமக்களை எப்படி நடத்துகிறார்களோ அதே போன்று யாராக இருந்தாலும் அதே போன்று பாரபட்சம் பார்க்காமல் நடத்த வேண்டும் என்று நடுநிலையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்தை சிலர் ஏற்க மறுக்கலாம். இதற்கு காவல்துறை சொல்லும் காரணம் அவர்கள் மாணவர்கள், அவர்களை பொதுமக்களில் ஒருவராக கருதி அவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முடியாது என்று கூறுகின்றனர். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதை மட்டும் மனதில் நிறுத்தி இதேபோன்று பொதுமக்கள் யாராவது இதுபோன்ற போதைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கும்போது அவர்களது முகத்தை ஊடகங்களுக்கு காண்பிக்காமல் சிறையில் அடைப்பதை வழக்கமாக இனிவரும் காலங்களில் காவல்துறை பின்பற்றி நடக்க வேண்டும் என்பது காட்பாடிவாழ் பொது மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதை காவல்துறை மனதில் கொண்டு பின்பற்றுமா? அல்லது உதாசீனப்படுத்துமா? என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும். காவல்துறை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மீறாமல் நடந்தால் சரி. அதுவரை பொறுத்திருப்போம்.