செய்யாறு கலைஞர் சிலை அருகே19-ம் நாள் தொடர்ந்து அன்னதானம்!

செய்யாறு, ஜன. 20 –
செய்யாறு கலைஞர் சிலை அருகே 19ம் நாளான நேற்று அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரகுபதி
ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்யாறு தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், ஒப்பந்ததாரர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதையடுத்து நகர செயலாளர் விஸ்வநாதன்,  ஒப்பந்ததாரர் கோபு,  கவுன்சிலர்கள் கோவேந்தன், ராஜலட்சுமி அண்ணாதுரை, தி.மு.க., பொறுப்பாளர்கள் சூரிய பிரகாஷ், அருள்  ஆகியோர் பொது மக்கள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கி மகிழ்ந்தனர். அன்னதானத்தை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் தொடர்ந்து தானத்தில் சிறந்த அன்னதானத்தை இடைவிடாது அன்னதானம் வழங்கும் இவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வேண்டும் என வாழ்த்தி விட்டுச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.