வேலூர், ஜன. 15-
திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்துக்களுடன் ,
மேலும் திமுக பொதுச் செயலாளர், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் பொதுப்பணி நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் நல்வாழ்த்துக்களுடன்,
காலை 10 மணியளவில் வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி கெங்கநல்லூர் ஊராட்சியில் உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா அரங்கத்தில் வேலூர் தெற்கு மாவட்ட திமுக மற்றும் அணைக்கட்டு தொகுதி திமுக சார்பில் திராவிட பொங்கல் விழா நநடைபெற்றது. இதில் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு மண்பானையில் பொங்கல் வைத்து பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதில் இவ்விழாவில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய,நகர,பகுதி ,பேரூர் கழக செயலாளர்கள், ¡அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.











Leave a Reply