செய்யாறு, ஜன. 15 –
செய்யாறு நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவை அலுவலர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
செய்யாறில் நெடுஞ்சாலைத் துறையில் கோட்ட பொறியளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தமிழர் திருநாளான பொங்கல் விழாவை ஒட்டி அலுவலக வளாகத்தில் புது பானையில் பொங்கல் வைத்து அலுவலர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்த விழாவிற்கு பொறியாளர் சந்திரன் தலைமை தாங்கினார். உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் கோபி, கண்காணிப்பாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெண் அலுவலர்கள் அனைவரும் ஒரே கலரில் சேலை அணிந்து வந்து பொங்கலிட்டு சூரியனுக்கு படையலிட்டு வழிபட்டார்.

இந்நிகழ்ச்சியில் கோட்டை கணக்கர் சத்தியவேல், முதுநிலை வரை தொழில் அலுவலர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அலுவலர்கள் அனைவரும் சமத்துவ பொங்கல் உற்சாகமாக கொண்டாடினர்.










Leave a Reply