செந்துறை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

அரியலூர் மாவட்டம் செந்துறை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வருவாய் வட்டாட்சியர் வேலுமணி தலைமையில் செந்துறை கிராம நிலை அலுவலர் மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம நிலை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் முன்னிலையில் செங்கரும்பு வைத்து பானையில் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் வைத்து படையல் இட்டு பொங்கலோ பொங்கல் என அரசு அலுவலர்கள் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடினார்கள்.