வேலூர், ஜன. 13-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) பெயரை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விக்சித் பாரத் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (VB GRAM G) என்று பெயர் மாற்றம் செய்த பாரதிய ஜனதா அரசைக் கண்டித்தும், உடனடியாக அந்தப் பெயர் மாற்றத்தை திரும்ப பெறக் கோரியும், மகாத்மா காந்தி பெயரிலான அத்திட்டம் அதே அம்சங்களுடன் தொடர்ந்து செயல்பட வலியுறுத்தியும் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது.
நிகழ்விற்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் தேவகிராணி ராஜேந்திரன், நீலகண்டன், விஜயேந்திரன், பாஸ்கரன், சரவணன், யுவராஜ், செங்குட்டவன், உவைஸ் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி பொறுப்பு குழு உறுப்பினர் டாக்டர். G.நவீன் பிரபு வரவேற்புரை ஆற்றினார். வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் திருமதி கிருஷ்ணவேணி ஜலந்தர் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். நிகழ்வில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சா.சங்கர், நித்தியானந்தம், தாண்டவமூர்த்தி, ஆரோன், பாபு பள்ளிகொண்டா பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அக்பர் பாஷா மற்றும் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் NMD.விக்ரம், மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் ராகேஷ், மாவட்ட RGPRS தலைவர் ஆனந்தவேல், மாநில RGPRS துணைத் தலைவர் ராஜசேகரன், மாநில எஸ்ஸி பிரிவு நிர்வாகிகள் சுப்பிரமணி, சுரேஷ், காத்தவராயன் ஓபிசி பிரிவு மாநில நிர்வாகிகள் நயீம் பர்வேஸ், சுனில், ஜோயல் ஜேசுராஜ், கேவி குப்பம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஜெகந்நாத ரெட்டி மற்றும் நிர்வாகிகள் ஹேமந்த், ராகுல், உமாபதி, ஸ்டாலின், ரங்கநாதன், சத்தியமூர்த்தி, ரஜினிகாந்த், மணிவேல், ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர். கிருபானந்தம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஏ.கே.ஜெயபிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கே.மோகன்ராஜ் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
முடிவில் குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் நன்றியுரை கூறினார்.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து குடியாத்தத்தில் காங்.,கட்சி சார்பில் உண்ணாவிரதம்










Leave a Reply