வேலூர் திமுக சார்பில் திராவிடப் பொங்கல் விழா கொண்டாட்டம்!

வேலூர், ஜன.12-
திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலூர் தெற்கு மாவட்டம், வேலூர் சட்டமன்ற தொகுதி சங்கரன்பாளையம் பகுதி கழக திமுக  சார்பில் திராவிடப் பொங்கல் விழா மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி பகுதி கழக செயலாளர் பாலமுரளி கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும்  அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார், மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி தூய்மை பணியாளர்களுக்கு  வேட்டி, சேலைகள்  வழங்கினர். இதில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, கழக பேச்சாளர் கழிஞ்சூர் கண்ணன், துணை செயலாளர்கள் முன்னா ஷெரிப், தேவனேசன், பொதுக் குழு உறுப்பினர்கள் கதிரேசன், சந்திரசேகரன் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.