செய்யாறு கலைஞர் சிலை அருகே13-ம் நாள் அன்னதானம் !

செய்யாறு, ஜன. 12 –
செய்யாறு கலைஞர் சிலை அருகே 13ம் நாளான நேற்று திருவத்திபுரம் நகரமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் இவரது உறவினர் கஜபதி ஆகியோர் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து தலைமை செயற்குகுழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, முன்னாள் தி.மு.க., பொறுப்பாளர் கஜபதி ஆகியோர் பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் நாவலபாக்கம் பாபு, கோவேந்தன், ரவி, மற்றும் தி.மு.க., பொறுப்பாளர்களான அசோக், சூரிய பிரகாஷ், கபடி ஞானமுருகன், நாகராஜன்
உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.