கோவை மாவட்டம் சிறுமுகையில் பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சிறுமுகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் தலைமை தாங்கினார் சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் தம்பு முன்னிலை வகித்தார் சிறுமுகை தியேட்டர் மேடு பகுதியில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை சிறுமுகை காவல் ஆய்வாளர் அம்பிகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன். மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்னகாமணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்
நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்கள், தனியார்பள்ளி ஓட்டுநர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் டெம்போ ஓட்டுநர்கள்மாணவர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து விஜயலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை அடைந்தனர் அங்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படுத்தப்பட்டது.











Leave a Reply