வேலூர்,ஜன.10-
வேலூர் மாவட்டம்,
பேரணாம்பட்டு. ஜன.9. பேரணாம்பட்டு சாலை பேட்டையில் உள்ள அன்னை தெரேசா மகளிர் சுய உதவிக் குழு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர மன்ற உறுப்பினர் கே.தேன்மொழி தாஸ் தலைமை தாங்கினார். ரேஷன் கடையின் விற்பனையாளர் எம். கல்பனா மதன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியை நகர மன்ற துணைத் தலைவரும், நகர திமுக செயலாளருமான ஆலியார் ஜூபேர் அஹமத் தனது கரங்களால் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் மூத்த நகர மன்ற உறுப்பினர் டி .அப்துல் ஜமீல், ரோட்டரி சங்க தலைவரும், நகர திமுக இளைஞரணி நிர்வாகியுமான ஆலியார் கிஜோர் அஹமத் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.











Leave a Reply