செய்யாறு நெடுஞ்சாலை துறையினர்பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !

செய்யாறு, ஜன. 6 –
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது. பழைய ஊதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ( டி.ஏ.பி.எஸ்., ) நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதுணையோடு செயல்படுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையினை வரவேற்கும் விதமாக செய்யாறு நெடுஞ்சாலைத் துறை
கோட்ட அலுவலக வளாகத்தில் அதிகாரிகள், அலுவலர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.