செய்யாறு சிப்காட் பூங்கா உலகளவில் பேசப்படுகிறது’ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !

செய்யாறு, ஜன. 4 –
‘செய்யாறு சிப்காட் பூங்கா உலக அளவில் பேசப்பட்டு வருகிறது’ மாத்தூரில் நடந்த ‘என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ நிகழ்ச்சியில் ஜோதி எம்.எல்.ஏ., பெருமையாக பேசினார்.

செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது மாத்தூர் ஊராட்சி. இது செய்யாறு சிப்காட் தொழில் பூங்கா எல்லையில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் ‘என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி’ என்ற மக்களை சந்திக்கும்  நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர்
எம்.கே.கார்த்திகேயன் ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஜோதி எம்.எல்.ஏ., கலந்துகொண்டு மக்களிடம் பேசியதாவது; ‘உங்களது ஊராட்சி எல்லையில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் பணிபுரிந்து வரும் பெரும்பாலான தொழிலாளர்கள் மாத்தூர் ஊராட்சிக்கு தான் தொழில் வரியை செலுத்தி வருகின்றனர். இதனால், மாத்தூர் ஊராட்சி ‘பணக்கார ஊராட்சி’ என்றும் அழைக்கப்பட்டு வருகின்றன. தி.மு.க.,  ஆட்சியில் தான் மாத்தூர் கிராமம் மெருகேற்றப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப் பட்டுள்ளது. செய்யாறு சிப்காட் பூங்கா பற்றி உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. இதை கேட்கும் போது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால்,  கடந்த காலங்களில் நடந்து முடிந்த பெரும்பாலான தேர்தல்களில் மாத்தூர் ஊராட்சி மக்கள், தி.மு.க.,விற்கு குறைந்த எண்ணிக்கையில் தான் ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.
அந்த நிலை வரும் சட்டசபை தேர்தலில் நடக்கக்கூடாது. கிளைக் கழக பொறுப்பாளர்களாகிய தெய்வமணி, உஷா, ஏகாம்பரம், லோகநாதன் ஆகிய நீங்கள் தான் மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள புதுப்புது பயனுள்ள திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள். 2 மாதங்கள் உழைத்தால், மாத்தூர் ஊராட்சியில் கூடுதல் வாக்குகளை பெற்று விடலாம்.’ இவ்வாறு ஜோதி எம்.எல்.ஏ., பேசினார்.