வேலூர், ஜன. 2-
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மெட்டுகுளம் பகுதியில் உள்ள நவ்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் முதலாம் ஆண்டு தொடக்க விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் அப்துல்ரகுமான், ஜலாலுதீன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் அமீர் கலந்துகொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும் விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முகமது லியாகத் அனைவருக்கும் நன்றி கூறினார்.










Leave a Reply