காட்பாடி பிரம்மபுரம் ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூஜை!

வேலூர், ஜன. 2-
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் மலையில் சஞ்சீவிராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலில் ஆகும் . இந்த சஞ்சீவி ராய பெருமாள் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு தரிசனம் செய்தனர்.  பெருமாளை தரிசித்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது .பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோயில் செயலாளர் டீக்காராமன் தலைமையில், பட்டாச்சாரியார் அன்பழகன் செய்திருந்தார்.