100 நாள் வேலையை அரசு நிறுத்தி விட்டதாக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி பேட்டி!

வேலூர், ஜன. 1-
மத்திய அரசு 100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் திமுக அரசு நூறு நாள் வேலையை நிறுத்திவிட்டதாக பொய்ச் செய்தி பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தேர்தலில் ஓட்டு பெறுவதற்காக பொங்கல் பரிசாக ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை தர தயங்க மாட்டார்கள். முன்னாள் அமைச்சர் கே .சி .வீரமணி-  குடியாத்தத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு மற்றும் வேலூர் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மேஷாக்ராஜா, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் குடியாத்தம் செருவங்கி பகுதியில் உள்ள ஏ.ஜி.சபையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே .சி .வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் வேலழகன், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மேஷாக்ராஜா, கிறிஸ்துவ கூட்டமைப்பு தலைவர் நோவா கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கிறிஸ்துவர்களுடன் கொண்டாடினர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
திமுக அரசு நூறு நாள் வேலை பெயர் மாற்றத்திற்காக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. 100 நாள் வேலையை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி தருவதாகவும்
100 நாள் வேலை கூலியை ரூ. 250 லிருந்து 350 ரூபாய் மாற்றித் தருவதாகவும் கூறினார்கள்.
தற்போது மத்திய அரசு
100 நாள் வேலை நிறுத்திவிட்டதாக திமுக அரசு பொய் செய்தியை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மத்திய அரசு 100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்தி  ஆணை பிறப்பித்துள்ளது.
வருகின்ற தேர்தலுக்காக மக்கள் மனதை மாற்றுவதற்காக திமுக முயற்சி செய்து வருகிறது. மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் நாங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம், நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் மக்களுக்கு தேவையற்றது மக்களுக்கு தேவையான வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை.
தற்போது இந்த ஆட்சியில் 100 நாள் வேலையில் நூறு நாட்கள் வேலை தராமல் 20 மற்றும் 30 நாள் மட்டுமே வேலை கொடுத்து கூலியையும் முறையாக வழங்கவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி மத்திய அரசிடம் வலியுறுத்தி நிலுவையில் உள்ள 100 நாள் கூலி பணத்தை பெற்றுக் கொடுத்தார். இதனால் ஆளுமை இல்லாத முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார்.
தற்போது திமுக ஆட்சியில் நெசவுத்தொழில் நலிவடைந்து உள்ளது.
வருகின்ற தேர்தலில் ஓட்டு பெறுவதற்காக பொங்கல் பரிசாக ஐந்தாயிரம் தருவார்கள். தேர்தலில் மக்களை ஏமாற்றி ஓட்டு பெறுவதற்காக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை தர தயங்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டின் கடன் சுமார் பத்து லட்சம் கோடி எட்டப் போகுது. இருந்தாலும் பொங்கல் பரிசாக எடப்பாடியார் ரூ. 5 ஆயிரம் கொடுக்க வலியுறுத்தி உள்ளதாக முன்னாள் அமைச்சர் கே .சி. வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.