சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு!

வேலூர், ஜன. 1-
வேலூர் மாவட்டம், பரதராமி அடுத்த கொத்தூர் கிராமம் விழுதோன் பாளையம் ஊர் பொதுமக்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக 35 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்னர். இதுவரையும் அவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வீட்டுவரி, கூரை வரி, தரை வரி, இபி பில் கட்டி வாழ்ந்து வருகின்றனர். மேலும் இது குறித்து ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சட்டம் உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தில் முறையிட்டனர். சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் ச. கௌரி தலைமையில் அந்த ஊர் பொதுமக்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வேலூரில் கடந்த திங்கட்கிழமை காயிதே மில்லத் கூட்டரங்கில் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 31.12.2025 அன்று குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலெட்சுமியிடம் கொத்தூர் விழுதோன்பாளையம் ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து மனு அளித்தனர் .மனுவைப் பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து பிறகு தகவலை கூறுவதாக உறுதி கூறியுள்ளார்.