செய்யாறில் கல்லூரி மாணவர்களுக்கான

‘நிதி விழிப்புணர்வு’ குறித்த பயிற்சி முகாம்

செய்யாறு, டிச. 31 –
செய்யார் அருகே தனியார் கல்லூரியில் மாணவ – மாணவிகளுக்கான ‘நிதி விழிப்புணர்’ குறித்து படக்காட்சிகளுடன் கூடிய ஒரு பயிற்சி முகாம் நடந்தது.

செய்யார் அடுத்த வடமாவந்தல் கிராமத்தில் ஏ.என்.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘தேசிய கல்வி மையம்’ சார்பில் பயிற்சியாளர் ஜெயபாலன் தலைமையில் படக்காட்சிகளுடன் கூடிய மாணவ – மாணவிகளுக்கு நிதி அவசியம் குறித்து பயிற்சி நடத்தப் பட்டது. இந்த பயிற்சியில், நாம் சாம்பாதிக்கும் பணத்தை எப்படி கையாள்வது, சேமிக்கும் வழிகள், அவசியம் இல்லாத பொருட்களை வீட்டில் வாங்கி வைக்கக்கூடாது, நாட்டில் ஏமாற்றுபவர்கள் அதிகரித்து விட்டனர். கவர்ச்சி கரமான திட்டங்களால் நாம் எப்படி ஏமாற்றப்படுகிறோம் என்பது குறித்து படக்காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு விவரிக்கப்பட்டது.

நமக்கு பிறப்பு முதல் – இறப்பு வரை நமக்கு பணம் தேவைப்படுகிறது.
மற்றவர்களை ஒப்பிட்டு வாழக்கூடாது. ஆடம்பர வாழ்க்கைக்கு செல்லக் கூடாது. பெரிய செலவு எதிர்பாராமல் வரும் – சேமிப்பு இருந்தால் அதை சமாளித்து விடலாம்.

‘உலகமே சந்தை தான்’ கொஞ்சம் ஏமாந்தாலும் நம்மளை ஏமாற்றி விடுவார்கள். நிறைய சம்பாதிக்கும் போது தான் ‘கிரிடிட்’ பயன்படுத்த வேண்டும். கல்லூரி படிக்கும்போதே மாணவர்களாகிய நீங்கள் வங்கிகள் மூலம் கல்விக்கடனை பெறலாம். ஆகியவை குறித்து மாணவ – மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராமு
மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.