குடியாத்தம் பார் அசோசியேஷன் துணை செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்த புதிய நீதி கட்சி நிர்வாகிகள்!

வேலூர், டிச.29-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பார் அசோசியேஷன் துணைச் செயலாளராக வேலூர் மாவட்ட மத்திய அரசு வழக்கறிஞரும், நெசவாளர்களின் நேசன் கே. பி. கோபி தேர்வு செய்யப்பட்டார். கே. பி. கோபி குடியாத்தம் பார் அசோசியேஷன் துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு குடியாத்தம் நகர புதிய நீதி கட்சியின் செயலாளர் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் சால்வை  அணிவித்து கோபிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார். அப்போது அவருடன் ஒன்றிய செயலாளர் ராம. இளங்கோ, மகளிரணி செயலாளர் உமா மகேஸ்வரி, ஏ.டி.கே.தினேஷ்குமார், வழக்கறிஞர் தீபக்குமார், நகர பொருளாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட புதிய நீதி கட்சி நிர்வாகிகள் உடனிருந்து குடியாத்தம் பார் அசோசியேஷன் துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கே.பி.கோபிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். புதிய நீதி கட்சி நிர்வாகிகள் தனக்கு வாழ்த்து தெரிவித்ததை நன்றியுடன் அவர்களுக்கு மீண்டும் தெரிவித்து அக மகிழ்ந்தார் மத்திய அரசு வழக்கறிஞர் கே.பி.கோபி.