




இராமநாதபுரம் மாவட்டம், ஸ்ரீ வல்லபை நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா வள்ளி ஜோதிட அறக்கட்டளை நிறுவனரும், ஸ்ரீ வல்லபை நகர் குடியிருப்போர் சங்க தலைவருமான டாக்டர். தனசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வள்ளி ஜோதிட அறக்கட்டளை ஸ்ரீ வல்லபை நகர் கிராம மக்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டினர். ஸ்ரீ வல்லபை நகர் பகுதியில் உள்ள 9 தெருக்களிலும் முதற்கட்டமாக 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
வள்ளி ஜோதிட அறக்கட்டளையும், ஸ்ரீ வல்லபை நகர் கிராம மக்களும் இணைந்து முதற்கட்டமாக இந்த பகுதியில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டதாகவும், இனி, இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகள் மற்றும் கிராமப்புறங்களில் மரக்கன்றுகள் நட உள்ளதாகவும், இராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை நகராமாக மாற்றுவதே எங்கள் பணி என்று டாக்டர். தனசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்த மரக்கன்று நடும் விழாவில், சங்கத்தின் பொருளாளர் சங்கு குமார், துணைத்தலைவர் சேகர் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.










Leave a Reply