வேலூர், டிச.25-
புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரின் 38 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குடியாத்தத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு புதிய நீதி கட்சி சார்பாக நகர செயலாளர் என். ரமேஷ் தலைமை வகித்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் எம்ஜிஆர் சிலைக்கு புதிய நீதி கட்சியின் நிர்வாகிகள் பாரத் மகேந்திரன், ஆர். ராஜ்குமார், ராம. இளங்கோ, செந்தில்குமார், உமா மகேஸ்வரி, யசோதா, கன்னியப்பன், சுந்தர்ராஜ், வெங்கடேசன் ,சத்தியமூர்த்தி, கணபதி மற்றும் புதிய நீதி கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு எம். ஜி. ஆரின் நினைவு நாளை அனுசரித்து மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.











Leave a Reply