சட்டம் உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் சேர்ந்து அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது பிடிஓவிடம் புகார் மனு!

வேலூர், டிச. 25-
சட்டம் உரிமை நீதி பாதுகாப்பு சங்க மாநிலச் செயலாளர் ராமு தலைமையில், மாவட்ட செயலாளர் ச.கௌரி முன்னிலையில், வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் கார்த்தி ஆகிய சங்கத்தினர் ஒன்றிணைந்து  பிடிஓவிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: அதாவது காட்பாடி தாலுகா அரும்பருதி ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் சென்னை செல்லும் நெடுஞ்சாலை  ஓரத்தில் மாருதி சுசூக்கி கணேஷ் கார் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியின் எதிரே ஏரிக்கரை ஓரத்தில் உள்ள நீர் நிலை அரசுக்கு சொந்தமானஇடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக கார் மற்றும் லாரிகளை சாலை ஓரத்தில் நிறுத்தி வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றவர் கள் நேருக்கு நேராக மோதி மூன்று பேர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பொதுமக்கள் சாலையை கடக்க கடினமாக உள்ளது. இதனால் இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து  பொதுமக்கள் இடையூறின்றி  செல்ல வழியை சரி செய்து தருவார்களா ?என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கிறார்கள். ஆதலால் அரசுக்கு சொந்தமான இடத்தை தனியார் கார் நிறுவனம் உபயோகப்படுத்தி பொதுமக்களுக்கு  ஏற்படுத்துவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.