தந்தை பெரியாரின் 52வது நினைவு நாள் அனுசரிப்பு!

வேலூர், டிச. 25-
வேலூர் மாநகர திமுக அலுவலகத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 52 வது நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ) அலங்கரிக்கப்பட்ட பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி. எஸ். விஜய், சி. ஞானசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.பி.ஏழுமலை, துணை செயலாளர் ஏ. ஆர். முன்னா ஷெரிப், பகுதி செயலாளர்கள் சி. எம்.தங்கதுரை, எஸ்.கணேஷ் சங்கர், எஸ்.தயாள் ராஜ், இ.சசிகுமார், கே. சுந்தர்விஜி, பாலமுரளி கிருஷ்ணா, தி.அ.முன்வர் பாஷா மற்றும் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.