முள்வாடியில் புதிய சிமெண்ட் சாலை திறப்பு விழா!

வேலூர்,டிச.23-
வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம், பீஞ்சமந்தை ஊராட்சி முள்வாடி கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை திறப்பு விழா நடந்தது. விழாவில் திமுக வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார்( அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்)  கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய சிமெண்ட் சாலையை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரகாஷ், கணபதி, பொது குழு உறுப்பினர் மணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருக்குமரன், ரேகா ஆனந்த மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.