அரசு குழந்தைகள் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா:காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் பக்கெட், பெட்ஷீட், எழுது பொருட்கள் வழங்கல்!

வேலூர்,டிச.24-
       வேலூர் மாவட்டம், தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கி வரும் காட்பாடி செங்குட்டை  அரசு குழந்தைகள் இல்லத்தில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் கிளையின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  இல்ல குழந்தைகளுக்கு பெட்ஷீட், பக்கெட், வாளி, மக், புத்தாடைகள் மற்றும் எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
       விழாவுக்கு அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை வகித்து பேசினார்.  முன்னதாக அரசினர் குழந்தைகள் காப்பக கண்காணிப்பாளர் தௌலத்அப்சல் வரவேற்று பேசினார்.     பொருளாளர் வி.பழனி, ஒய்ஆர்சி தலைவர் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், மேலாண்மைக்குழு உறுப்பினர் டி.லிவிங்ஸ்டன் மோசஸ்,  பி.என்.ராமச்சந்திரன், டாக்டர் ஜார்ஜ்கோஷி, டாக்டர்.மோகன்தாஸ், எ.ஜெ.சாம்ராஜ், ஜவகர், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். 
காட்பாடி ரெட்கிராஸ் வாழ்நாள் உறுப்பினர்கள் ஆர்.சுதாகர், தன்வின், தைவிக் உள்பட இல்ல மாணவிகள் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு மேலாண்மைக்குழு உறுப்பினர் டி.லிவிங்ஸ்டன் மோசஸ்,  பி.என்.ராமச்சந்திரன், டாக்டர் ஜார்ஜ்கோஷி, டாக்டர்.மோகன்தாஸ், எ.ஜெ.சாம்ராஜ், ஜவகர், சத்தியமூர்த்தி ஆகியோர் சார்பாக மாணவிகளுக்கு தேவையான இல்ல குழந்தைகளுக்கு பெட்ஷீட், பக்கெட், வாளி, மக், புத்தாடைகள் மற்றும் எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வழங்கினார்.    முடிவில் இல்ல காப்பாளர் ப.சந்திரகலா நன்றி கூறினார்.