வேலூர்,டிச.22-
வேலூர் மேற்கு மாவட்டம், வேலூர் அடுத்த கொணவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. 32 வது வார்டு செயலாளர் வி. பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி, பகுதி செயலாளர் எஸ். வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன் கொணவட்டத்தில் உள்ள டாக்டர் பி. ஆர் .அம்பேத்கர் சிலைக்கு மேளதாளத்துடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழக வெற்றிக்கழக புதிய அலுவலகத்தை திறந்து வைத்து ஏழை, எளிய மக்கள் 1001 பேருக்கு இலவசமாக வேட்டி, சேலைகள் வழங்கி, மதிய உணவாக பிரியாணி பொட்டலங்களை வழங்கி மகிழ்ந்தார் .இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட இணைச் செயலாளர் எம். சீனிவாசன், மாவட்ட பொருளாளர் எம். பிரசாந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வினோத் கண்ணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பி.ஏ. இம்தியாஸ், பகுதி செயலாளர் எஸ் .சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் 32வது வார்டு செயலாளர் வி.பிரபாகரன் விமரிசையாக செய்திருந்தார்.











Leave a Reply