வேலூர்,டிச.22-
வேலூர் மாவட்டம், காட்பாடியில் கடலூர்- சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செங்குட்டை சமுதாயக்கூடத்தில் தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் வேலூர் மாவட்ட கிளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடந்தது.
இந்த வேலூர் மாவட்ட கிளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் டாக்டர்.மு. சிவதமிழவன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சி. பி. ராஜன், மாநில இணை செயலாளர் எஸ். மாட பாஸ்கர், மாநில துணைச் செயலாளர் டாக்டர் எஸ். குணசேகரன், மாநில செய்தி தொடர்பாளர் ஏ. அம்ஜத் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட அமைப்பாளர் டி.என். ஜெயகாந்தன் வரவேற்றார். வேலூர் மாவட்ட செயலாளர் எஸ். சதீஷ்குமார் அறிமுக உரையாற்றினார். வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஆசீப்அலி அனைவரையும் ஒருங்கிணைத்தார். கூட்டத்தில் பல்வேறு அச்சு ஊடக செய்தியாளர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். நண்பகல் 12 மணியளவில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது .இதை தொடர்ந்து வேலூர் மாவட்ட கிளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூத்த செய்தியாளர்கள் பல்வேறு கருத்துக்களை கூறியதுடன், வேலூர் மாவட்டத்தில் நிலவும் குறைபாடுகளையும், அசாதாரண நிலையையும் விளக்கி கூறினர். இதை தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பத்திரிக்கை நல வாரியத்தில் நமது பத்திரிகை செய்தியாளர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. நமது யூனியனின் வேலூர் மாவட்டம் சார்பில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நமது யூனியனின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ஐந்து பேரை சங்கத்திலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவித்து அதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 30ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள நமது நிறுவனர் மற்றும் மாநில தலைவர் டாக்டர் மு. சிவதமிழவனின் 67ஆவது பிறந்த நாளை சிறப்பாக நடத்துவது என்றும், அந்த விழாவில் வேலூர் மாவட்டம் சார்பில் திரளாக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இனிய ஆலோசனை கூட்டத்தை பல்வேறு இடையூறுகளைத் தாண்டி சிறப்பாக நடத்திய மாவட்ட செயலாளர் எஸ். சதீஷ்குமார், மாவட்ட அமைப்பாளர் டி.என். ஜெயகாந்தன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். ஆசீப்அலி ஆகியோர்களுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் இந்த கூட்டம் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொண்டும், பாராட்டுதல்களையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செய்தியாளர்கள் தாங்கள் பணி புரியும் நிறுவனங்களிடமிருந்து பணி நியமன கடிதங்களை கொண்டு வந்து வேலூர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோரிடம் அளித்தும் அதை வேலூர் மாவட்டத்தில் உள்ள செய்தியாளர்கள் குழுவில் (whatsapp குழுவில்) அவர்களது பெயரை சேர்க்காமல் இருக்கும் பிஆர்ஓ மற்றும் ஏ பி ஆர் ஓ ஆகியோரின் செயலை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன் அவர்களது செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை விளக்கம் கேட்டு யூனியன் சார்பில் அவர்களுக்கு கடிதம் அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இறுதியாக மாவட்ட அமைப்பாளர் டி .என். ஜெயகாந்தன் நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து மதியம் கூட்டத்தில் கலந்து கொண்ட செய்தியாளர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்ட செய்தியாளர்கள் தாங்கள் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து பணி நியமன கடிதம் கொடுத்த பிறகும் whatsapp குரூப்பில் சேர்க்காமல் இருக்கும் பி ஆர் ஓ மற்றும் ஏ பி ஆர் ஓவுக்கு தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் கண்டனம்!










Leave a Reply