வேலூர்,டிச.22-
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு போதை பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘வேலூர் மாரத்தான் 2025 ‘சிறப்பாக நடந்தது. வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காலை 6 மணியளவில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை வேலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பி. கார்த்திகேயன் மற்றும் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பிரபல திரை கலைஞர் புகழ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளைஞர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் வேலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் டாக்டர் ஏ. பாலமுருகன் மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் என். பாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தனர். இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பல்வேறு பிரிவுகளுக்கு சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பிடித்த வெற்றியாளர்களுக்கு மொத்தம் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பரிசுகளாக வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதலிடம் பிடித்த வெற்றியாளர்களுக்கு தலா ரூபாய் 15,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டியானது ஸ்ரீபுரம் தங்க கோவில் அறங்காவலர் மற்றும் ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் இயக்குநருமான தங்கக்கோவில் முனைவர் எம். சுரேஷ் பாபு தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் ஸ்ரீ நாராயணி பீடத்தின் நிர்வாகிகள், ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் தலைமை ஆலோசகர், இரு பள்ளிகளின் முதல்வர்கள், நிர்வாக அலுவலர், துணை முதல்வர் ,பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சமூக மாற்றத்திற்கான இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Leave a Reply