‘நாமலே சுகாதாரமாக இருந்தால் நோய்கள் அண்டாது’

‘நலன் காக்கம் ஸ்டாலின் திட்ட முகாமில்’

தரணிவேந்தன் எம்.பி., பேசினார் !

செய்யாறு, டிச. 21 –
‘நாமலே சுகாதாரமாக இருந்தால் நோய்கள் நம்மளை அண்டாது’ என, வெம்பாக்கத்தில் நடந்த ‘நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் தரணிவேந்தன் எம்.பி., பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அடுத்துள்ளது வெம்பாக்கம் கிராமம். இங்கு ‘நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்’ நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன் தலைமை தாங்கினார். செய்யாறு சப் – கலெக்டர் அம்பிகா ஜெயின், மாவட்ட சுகாதார அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

முகாமில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் பேசியதாவது; ‘நோய்க்கும் – நமக்கும் தான் போட்டி. நாம் சுகாதாரமாக வாழ்ந்தால் நோய் நம்மளை அண்டாது. உணவின் பழக்க முறைகளை கடைப்பிடித்தால் சராசரியாக ஒவ்வொருவரும் 75 ஆண்டு வரை உயிர் வாழலாம். எனது தந்தைக்கு சர்க்கரை வியாதி இருந்தது. அந்த காலத்தில் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், இந்த காலம் அப்படி இல்லை. மருத்துவத் துறையில் நிறைய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஒரு சில மணிகளில் உடலில் என்ன குறைபாடு உள்ளது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து விடுகின்றனர்.

மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் கிராமப்புறங்களிலும் ‘நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்’ நடந்து வருகிறது. இது போன்ற மருத்துவ முகாம்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தரணி வேந்தன் எம்.பி., பேசினார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் மாமண்டூர் ராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஜே.சி.கே.சீனுவாசன், என்.சங்கர், தினகரன் ஞானவேல், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர்
எம்.கே.கார்த்திகேயன், மருத்துவர்கள் தி.மு.க., பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பட விளக்கம்:

செய்யார் அடுத்த வெம்பாக்கம் கிராமத்தில் ‘நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்’ நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தரணி வேந்தன் எம்.பி., – ஜோதி எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சப் கலெக்டர் அம்பிகா ஜெயின், மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.