வேலூர், டிச.19-
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா சக்தி வாராஹி கோவிலில் வியாழக்கிழமை காலையில் வினை தீர்க்கும் வியாழன் மஹா வாராஹி சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குங்குமம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பக்தர்கள் இதை வரிசையில் நின்று வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.











Leave a Reply