வேலூர் தமிழ்நாடு நண்பர்கள் நலச்சங்க நிர்வாகிகள் பங்கேற்பு!
வேலூர், டிச. 17-
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம் காந்தப்பளையத்தில் நடைபெற்ற விஸ்வகர்ம 1425ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் பத்மஶ்ரீ விருத பெற்ற சிற்பி ராதாகிருஷ்ண ஸ்தபதி உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
தமிழகத்தில் 1400 ஆண்டுகளுக்குமுன் தோன்றிய மிக பழமையான அகில பாரத விஸ்வகர்ம மடாலயம், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், காந்தப்பாளையத்தில் அமைந்துள்ள அகிலபாரத விஸ்வகர்ம ஜெகத்குரு ஶ்ரீநந்தல் மடாலயத்தின் 65 பீடாதிபதி ஶ்ரீஶ்ரீஶ்ரீ.சிவராஜ ஞானாச்சாரிய குரு சுவாமிகள் தலைமையில் 1425ஆம் ஆண்டு குரு பூஜை விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
பர்வத திருமூலாரண்ய திவ்யசேத்ர கண்ணுவ மகரிஷி ஆஸ்ரம மிருகண்ட நதி மனு, மய, துஸ்ட, சில்பி, விஸ்வக்ஞா விஸ்வகர்ம மகத்துவ ஜெகத்குரு ஆதி சிவலிங்காச்சார்ய மூர்த்திகட்கு 1425 ஆண்டு குருபூஜை விழா அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது. குருபூஜா விழாக்குழு தலைவர் கோ.விசுவநாதன் முன்னிலை வகித்தார்.
ஆதீன இளைய பட்டம் வேதபாடசாலை முதல்வர் சிவ.சிவஞானசேகரன், தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க நிறுவனர் மற்றும் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.
வேலூர் தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க தலைவர் சி.தேஜோமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் ஞான நடராஜன், துணைச்செயலளார் கோ.சுவாமிநாதன், தலைமை நிலையச் செயலாளர் சு.சோமாஸ்கந்தன், வி.கருணாகரன் உள்ளிட்டோர் பேசினர்.
கண்ணமங்கலம் எ.கே.எஸ்.சரவணன் ஆச்சாரி தலைமை தாங்கினார். பெங்களூரு எ.பன்னீர்செல்வம் முன்னிலையில், சமூக ஐவர்ண அனுமன் கொடியினை ஓய்வுபெற்ற உதவிக்கல்வி அலுவலர் தேவ.ஆசைத்தம்பி ஏற்றினார்.
திருவண்ணாமலை கதிரவன், ஓதுவார் தமிழிசை எஸ்.லட்சுமிபிரியா ஆகியோர் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியை நடத்தினர்.
அம்ருதநாயகி அன்னசாலா திறப்பு விழா தேவ.ஆசைதம்பி, கே.என்.இராமசாமி ஆச்சாரி, எம்.மணிவேல் ஆச்சாரி ஆகியோர் திறந்து வைத்தனர். பென்னாகரம் சக்தி மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் கே.கனகராஜ், முன்னிலை வகித்தார். குரு மாதா மஞ்சுளா தேவி, டாக்டர் முருகம்மாள் கனகராஜ், கலாவதி மணிவேல், வி.மரகதம் ஆகியோர் அன்னதானம் நிகழ்வினை தொடங்கி வைத்தனர்.
ஜோதிட முனைவர் வாக்கு சித்தர் டாக்டர் கே.பி.வித்யாதரன் அவர்களால் ஆதீன கும்பாபிஷேக விழாக்குழு ஸ்ரீ ஆதி சிவலிங்கமூர்த்தி குரு பூஜா கைங்கர்ய குழு கேரள மாநில விஸ்வபிரம்ம மடம் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
அருப்புக்கோட்டை ஆர்.ராஜேந்திரன், கோட்டையம் ஆர்.உன்னிகிருண்ணன், செந்தில்வேல் ஆகியோர் பேசினர்.
பௌரோகித சங்கத்தின் செயலாளர் ஜோதி முருகாச்சாரி, குழுவினரின் தலைமையில் 6 கால பூஜைகள் நடைபெற்றது. திருப்பூர் ஜோதிடர் கணியர் இராஜசேகரன் குழுவினர் விடை இங்கே வினா எங்கே என்ற தலைப்பில் பக்தர்களின் கேள்விகளுக்கு ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் விடை அளித்தனர்.
ஆதீன விருது வழங்கும் விழா
65வது மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவராஜ ஞானாச்சாரிய குருஸ்வாமிகள் தலைமையில் மத்திய அரசின் பம்ஶ்ரீ விருது பெற்ற தேவ. இராதாகிருஷ்ண ஸ்தபதிக்கு சிற்ப சேவா இரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் ஜோதிடத்துறையில் கனக.பரமசிவம், சென்னை எஸ்.இராஜராஜேஸ்வரி, பொற்பணி துறையில் எஸ்.மாரியப்பன், சமூக சேவைத்துறையில் எம்.சங்கரவடிவேல், இன்னிசை துறையில் கதிரவன் ஓதுவார், மரசிற்ப துறையில் பி.பன்னீர், சா.பூபதி, பஞ்சலோக சிற்ப துறையில் ஆர்.முருகதாஸ், ஆர்.வினோத், தேவ.சுவாமிநாத ஸ்தபதி, ஆன்மீக சேவையில் அருணாச்சலசிவம், மு.லோகநாதன், ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் சோளிங்கர் எ.எல்.சுவாமி, ஶ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ஜி.குருசாமி, கனகபரமசிவம், குடியாத்தம் வி.பி.மோகனவேல், சென்னை நாகராஜன் ஸ்தபதி, விக்னேஷ் என்.சுவாமிநாதன், கும்பகோணம் கோவிந்தராஜ், தூத்துக்குடி வானமாமலை பெருமாள், ஓய்வுபெற்ற உதவி ஆட்சியர் கிரிஜா, ஓய்வுபெற்ற தொலைதொடர்வுத்துறை அலுவலர் ராஜேந்திரன், தமிழ்நாடு விஸ்வபிராமினர் புரோவிஸ்வகர்மகிதர்கள் சங்க நிர்வாகிகள் கோவை வெள்ளியங்கிரி ஆச்சாரி, கும்பகோணம் யுவராஜ், முருகன் ஸ்தபதி, ஆகியோர் பேசினர்.
மாலையில் நடைபெற்ற விழாவில் குருசுவாமிகள் ஸ்ரீ ஆதி சிவலிங்கச்சாரிய பூஜைகள் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
இந்த விழாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குருவின் அருளாசியினை பெற்றனர்.












Leave a Reply