சின்னபாலம்பாக்கத்தில் தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

வேலூர், டிச.17-
வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, கணியம்பாடி தெற்கு ஒன்றியம், சின்னபாலம்பாக்கம் ஊராட்சி கிராமத்தில்
கணியம்பாடி தெற்கு ஒன்றிய திமுக
சார்பில் கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு 130 பேர் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திமுக வேலூர் தெற்கு மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி 130 பேர் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார். இதில் ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன்,  பகுதி செயலாளர் தங்கதுரை, ஒன்றிய நிர்வாகிகள் சசிகுமார் ,காசி, கோபி, வெங்கடேசன், ஜீவா, ஜெயப்பிரகாஷ்,
ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுரேஷ், ரவிக்குமார் ,சிவக்குமார், சுந்தர்ராஜ் ,கருணாநிதி மற்றும் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள்  , பொது மக்கள் உடன் இருந்தனர்.