பால் முகவர்களின் கூட்டுறவு முயற்சியில் ‘MD Dairy’ பால்–தயிர் பாக்கெட் வடிவமைப்பு அறிமுகம்

சென்னை, கொளத்தூர்:
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில், சங்க உறுப்பினர்களான பால் முகவர்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள MD Dairy பால் மற்றும் தயிர் பாக்கெட் வடிவமைப்பு (Packet Design) அறிமுக நிகழ்ச்சி சென்னை கொளத்தூரில் அமைந்துள்ள TNMDEWA DAPPL தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் நிறுவனத் தலைவரும், MD Dairy நிர்வாகத்தின் நிர்வாக இயக்குநருமான சு.ஆ. பொன்னுசாமி தலைமை தாங்கினார். அவர் MD Dairy பால் மற்றும் தயிர் பாக்கெட் வடிவமைப்புகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்ததுடன், MD Dairy பால் மற்றும் பால் பொருட்களுக்கான சிறப்பு வாசகங்களைத் தேர்வு செய்ய நடத்தப்பட்ட “நச், நறுக்” வாசகப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களையும் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் பொதுச் செயலாளரும், MD Dairy பால் பொருட்கள் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநருமான எஸ். பொன்மாரியப்பன், ஒருங்கிணைப்பாளரும் இணை நிர்வாக இயக்குநருமான V. கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான எஸ். சுரேஷ்குமார் நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை வரவேற்று வரவேற்புரையாற்றினார்.

பால் முகவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் உன்னத நோக்கத்துடன் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள கூட்டுறவு பால் நிறுவனத்தின் தொடர் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தொலைநோக்கு சிந்தனைகள் குறித்து ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இதில் கூட்டுறவு பால் நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்களாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பால் முகவர்கள் இணைந்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் சங்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். குமார் நன்றியுரை நிகழ்த்த, கூட்டம் இனிதே நிறைவுற்றது.

இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில மக்கள் தொடர்பாளர் ஜெ. அபுபக்கர், மாநில துணைத் தலைவர்கள் கே. காண்டீபன், O.E. மகேந்திரவர்மன், S. பால்துரை, இணைச் செயலாளர்கள் G. பவுல் சந்தோசம், எம்.ஏ. காஜா மொய்தீன், கு. சிவா, துணைச் செயலாளர்கள் எஸ். லோகநாதன், சேது பாலாஜி, செயற்குழு உறுப்பினர் ரெ. பூபதி கணேஷ் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு பால் நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்களான பால் முகவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.