வேலூர்,டிச.13-
வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்தவர் மைக்கேல் மகன் தேவசகாயம்( 42 ). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரிடம் நட்பு ரீதியாக பழகுவது போல கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி என்ற ஆட்டோ டிரைவர் அறிமுகமானார் .அவரை நம்பி அவருக்கு இருந்த சொந்த கடனுக்காக தேவசகாயம் ஜாமீன் சார்பாக ரூ. 2 லட்சத்திற்கு கையொப்பமிட்டார் .இந்த வாங்கிய பணத்தை கிருஷ்ணமூர்த்தி திருப்பி செலுத்தாததால் ஜாமீன் தாரரான தேவசகாயத்தின் ஆட்டோவை தனியார் நிதி நிறுவனம் கையகப்படுத்தி எடுத்துச் சென்று விட்டது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். இந்நிலையில் செய்வதறியாது திகைத்த தேவசகாயம் இந்த தகவலை கிருஷ்ணமூர்த்தியிடம் தெரிவித்து தனக்கு தர வேண்டிய ரூ. இரண்டு லட்சத்தை தருமாறு கேட்டார். ஆனால் கிருஷ்ணமூர்த்தி இதையெல்லாம் கண்டும் காணாமல் விட்டுவிட்டு அவருக்கு எதுவும் தெரியாதது போல இருந்து வந்தார் தொடர்ந்து தேவசகாயம் தனது பணம் ரூபாய் 2 லட்சத்தை திருப்பி தந்தால் தான் தன்னால் ஜீவனம் செய்ய முடியும் என்று மன்றாடி கேட்டும் அவர் தருவதாக இல்லை .இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தகவலை வைத்துக்கொண்டு உன்னால் எப்படி பணத்தை திருப்பி வாங்க முடியும் நானும் பணத்தை திருப்பி தர மாட்டேன் என்று கிருஷ்ணமூர்த்தி சகட்டு மேனிக்கு சொல்லிவிட்டார். அன்றிலிருந்து இன்று வரை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வேலூர் காவல் உட்கோட்ட டிஎஸ்பி, உட்பட பாகாயம் காவல் நிலையம், தெற்கு காவல் நிலையங்களில் மாறி மாறி புகார் கொடுத்து வருகிறார் தேவசகாயம். ஆனால் பாதிக்கப்பட்ட தேவசகாயத்திற்கு எவ்வித நியாயமோ நீதியோ கிடைத்ததாக தெரியவில்லை. வேலூர் மாவட்டத்தில் இதற்கு முன்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ராஜேஷ்கண்ணன் மட்டுமே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால் யாரும் இவரது வழக்கை விசாரிக்க முன் வரவில்லை. ஆனால் தேவசகாயமும் நம்பிக்கை தளராமல் தொடர்ந்து வரும் எஸ்பிக்களுக்கு எல்லாம் புகார் மனுவை கொடுத்து வந்துள்ளார். கடைசியில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வந்துள்ள மயில்வாகனனிடமும் மனு கொடுத்து பார்த்தார். இந்த வழக்கில் ஆட்டோ டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும் .அப்படி இல்லை என்றால் தனக்கு சேர வேண்டிய பணம் ரூ.2 லட்சத்தை திருப்பி வாங்கி தர வேண்டும் என்று தெரிவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் மனுவை அளித்துள்ளார் தேவ சகாயம் .இந்த புகார் மனுவின் மீதாவது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்வாரா? அல்லது அவரிடம் பணத்தை பெற்று தேவசாயத்திடம் கொடுத்து வழக்கை நிறைவு செய்வாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Leave a Reply