வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் பேச்சு !


செய்யாறு, டிச. 13 —
‘வீடு இருந்தால் தான் கூரை மாற்ற முடியும்’ அதுபோல தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்தால் கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையும்’, என, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் ‘என் வாக்குச்சாவடி வெட்டி வாக்குச்சாவடி’ என்ற நிகழ்ச்சி மூலம் பல்லாவரம் கிராம மக்களிடம் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் என்.சங்கர், ஏழாச்சேரியை சேர்ந்த மாவட்ட அயலக அணி துணைத் தலைவர்
எம்.கே.கார்த்திகேயன் ஆகியோர் என் ‘வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பல்லாவரம் கிராம மக்களை நேற்று சந்தித்தனர். பல்லவர் காலத்து மாமண்டூர் – குரங்கனில்முட்டம் ஆகிய கிராமங்களில் உள்ள ‘குடைவரை கோயில்களின்’ கலை தொழில் நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்து, கிராம மக்களுக்கு நினைவுக்கு கொண்டு வந்தனர்.
கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.சங்கர் கிராம மக்களிடம் பேசியதாவது; ‘தமிழ்நாடு தலை குனியாது. மண் – மொழி – மானத்தை நாம் காத்தே தீருவோம். இவைகள் அனைத்தும் நிறைவேற வேண்டுமென்றால், தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சியே அமைய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி புரிந்த அ.தி.மு.க., பல்லாவரம் கிராமத்திற்கு செல்லும்படி அளவுக்கு எதுவுமே செய்யவில்லை. எனது முயற்சியால் பத்தே மாதங்களில் 70 லட்ச ரூபாய்க்கு வளர்ச்சி பணிகளை நிறைவேற்றியுள்ளேன். இது உங்களுக்கே நன்கு தெரியும். ‘வீடு இருந்தாத்தான் கூரை மாற்ற முடியும்’. அது போல் தி.மு.க., ஆட்சியில் தான் கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையும். 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளன. பொறுப்பாளர்களாகிய நீங்கள் தினமும் வாக்காளர்களை சந்தித்து, தற்போது நமது ஆட்சியில் செய்துள்ள வளர்ச்சி பணிகளை எடுத்துக் கூற வேண்டும்.
கடந்த சட்டசபை தேர்தலில் போது, பல்லாவரம் – குரங்கனில்முட்டம் உள்ளிட்ட வெம்பாக்கத்தில் கிழக்கு பகுதிகளின் வாக்குகள் எண்ணும் போது தி.மு.க.,வை முன்னணிக்கு கொண்டு வந்தது. அதேபோல் 2026 சட்டசபை தேர்தலில் அதைவிட கூடுதல் வாக்கு நாம் பெற வேண்டும், அதற்காக பொறுப்பாளாகிய நீங்கள் தினமும் வாக்காளர்களை சந்திக்க வேண்டும்.’ இவ்வாறு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க., பொறுப்பாளர்களான ரவி, ஏழுமலை, செந்தில் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.










Leave a Reply