பணம் வைத்து சூதாடிய இளம் பெண் கைது:  இளம்பெண்ணின் கணவர் தப்பியோட்டம்!

வேலூர், டிச. 12 –
வேலூர் மாவட்டம் ,விரிஞ்சிபுரம் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் விரிஞ்சிபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார்  அந்த பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சுகன்யா (27) என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடியது அவரது கணவர் சதீஷ்( 32) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சுகன்யாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூபாய் 3000 ரொக்கப் பணத்தை கைப்பற்றினர் .போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய சதீஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.