பேரணாம்பட்டு நகர திமுக சார்பில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு !

வேலூர்,டிச.8-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகர திமுக சார்பில் அண்ணல் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ஆலியார் ஜூபேர் அஹமது தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் வி. பிரேமா வெற்றிவேல்,  நகர திமுக அவைத் தலைவரும் ,நகர மன்ற  உறுப்பினருமான டி. அப்துல் ஜமீல், மாவட்ட திமுக துணைச் செயலாளர் பேராசிரியர் எம். பிரபாத் குமார், நகர திமுக துணைச் செயலாளர் பி .பொற்கை பாண்டியன் ( எ) சின்னா, நகர மன்ற உறுப்பினர் ஆலியார் நுரே சபா ஹர்ஷத் அஹமத் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு நகர திமுக சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது .இதில் நகரமன்ற உறுப்பினர்கள் எல். சின்ன லாசர், எஸ். சுல்தானா அப்துல் பாசித், எஸ். இந்திராகாந்தி சரவணன் ,நஜிஹா ஜூபேர் அஹமத், நாகஜோதி பாபு ,ஜானகி பீட்டர் ,முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கே. ராஜவேலு, பிற அணி நிர்வாகிகள் வே. கலைநேசன், எஸ். தெளபிஃக் அஹமத் ,ஆலியார் கிஷோர் அஹமத் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.