வேலூர்,டிச8-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி கிராமத்தில் பத்தலப்பல்லி கிராம பொதுமக்கள் சார்பில் டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் 69- வது நினைவு தினத்தை முன்னிட்டு ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு வேலூர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் கே. ராஜமார்த்தாண்டன் தலைமை தாங்கினார். எம். சீனிவாசன், எஸ். நந்தகுமார், கே. சத்திய குமார், சரத்குமார், எம். பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பத்தலப் பல்லி ஊராட்சி செயலாளர்.ஏ.மணிவண்ணன். நன்றி கூறினார்.











Leave a Reply