பேரணாம்பட்டு பாலூர் ஊராட்சியில் நடைபெறும் நூறுநாள் வேலை திட்டத்தை ஆய்வு செய்த பி.டி.ஓ.சதீஷ்குமார்!

வேலூர்,டிச.7-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், பாலூர் ஊராட்சியில் நூறு நாள் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நூறு நாள் வேலை திட்டத்தை புதிய வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி ஏற்றுக்கொண்ட சதீஷ்குமார் நூறுநாள் வேலை நடைபெறுவதை ஆய்வு செய்ய வருகை தந்தார். அவரை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கோமதி செளந்தரராஜன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.ஜீவிதா செந்தில், (பொறுப்பு) ஊராட்சி செயலாளர் ஆர்.புருஷோத்தமன் ஆகியோர் வரவேற்று பாலூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் நூறுநாள் வேலை குறித்து விளக்கிக் கூறினர்.