வேலூர்,டிச.7-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா அதி விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் மசிகம் பி. விஸ்வநாத் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பொகலூர் ஜெ.ஜனார்தனன், மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் எம்.டேவிட் ஆகியோர் வரவேற்றனர். ஒன்றிய தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மாச்சம்பட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் எஸ்.உதயகுமார், எம்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வேலூர் மாவட்ட திமுக செயலாளருமான ஏ.பி. நந்தகுமார் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆயிரம் மாணவ ,மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் முன்னாள் எம்.பி., மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலு விஜயன், மாநில தி.மு.க., இளைஞரணி துணை செயலாளர்கள் ஜி.பிரபு கஜேந்திரன், பி.எஸ்.சீனிவாசன், வேலூர் மாவட்டதிமுக இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் கே.ராஜமார்த்தாண்டன், பேரணாம்பட்டு நகர திமுக செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ஆலியார் ஜூபேர் அஹமத், குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளான ஜி.எ.சரசு, டி.விஜயகுமார், எம்.பிரபாத் குமார், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் எம்.டி.சீனிவாசன், கள்ளூர் ரவி, பேரணாம்பட்டு ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஜெ.சித்ரா ஜனார்தனன், நகரமன்ற தலைவர் வி. பிரேமா வெற்றிவேல், ஒன்றியக் குழு துணை பெருந்தலைவர் டி.லலிதா டேவிட், முன்னாள் குடியாத்தம் நகர மன்ற தலைவர் த.புவியரசி, வழக்கறிஞர் மசிகம் எம்.ஹரிநாத் முனிசாமி, நகரமன்ற உறுப்பினர்கள் எல்.சின்னா லாசர், எஸ்.சுல்தானா அப்துல் பாசித், டி. அப்துல் ஜமில், எஸ்.நுரேசபா ஹர்சத் அஹமத், நஜிஹா ஜூபேர் அஹமத், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.உத்திரகுமாரி செல்வம், ஆலியார்கிஷம் அஹமது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஒரு கட்சியின் மாநாடு போல பேரணாம்பட்டு நகரம் முழுவதும் தி.மு.க.தொண்டர்களின் கூட்டம் கூடியது என்பதும் இந்த விழாவை மிகவும் சீறுடனும், சிறப்புடனும் நடத்திய மசிகம் விஸ்வநாத்தை அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான எ.பி.நந்தகுமார் மனதார பாராட்டினார் என்பது குறிப்பிடதக்கது. முடிவில் ஒன்றிய தி.மு.க. இணை அமைப்பாளர் வழக்கறிஞர் ஜெ.நேரு நன்றி கூறினார்.











Leave a Reply