ஜெ.,வின் 9ம் ஆண்டு நினைவு தினம்: அதிமுகவினர் அனுஷ்டிப்பு!

செய்யாறு,டிச.6-
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அ.தி.மு.க., நகர செயலாளர் வெங்கிடேசன் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அலங்கரிங்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுகவகனர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் ஜனார்த்தனன், நிர்வாகிகள் பிரகாஷ், ரவிச்சந்திரன், விமலா மகேந்திரன், கோவிந்தராஜ், இளையராஜா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.