முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம்

அதிமுக கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (டிசம்பர் 05)  செந்துறையில் அமைந்துள்ள அறிவுசார் குடையோர் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு அம்மாவின் தொண்டன் செந்துறை
கொ.அரவிந்த்  ஏற்பாட்டில்  செந்துறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் உதயம் எஸ்.ரமேஷ் தலைமையில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளைக் கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்ட அம்மாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.