வேலூர்,டிச.6-
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா வேலூர் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் குடியாத்தம்- வேலூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. குடியாத்தம் எம்எல்ஏ அமுலு விஜயன், நகரமன்ற தலைவர் சௌந்தரராஜன், ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம், பேரணாம்பட்டு ஆத்மா தலைவர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான சௌந்தரராஜன் வரவேற்றார். திமுக மாவட்ட அவை தலைவர் முகமது சகி, ஒன்றிய செயலாளர் கல்லூர் ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேலூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு பொது நிறுவனங்கள் குழு தலைவரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.,வுமான ஏ.பி. நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் இவர்களுக்கு அறுசுவை அசைவவிருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு நகர செயலாளர் ஜூபேர் அஹமத், ஒன்றிய செயலாளர் பிரதீஷ், நகராட்சி கவுன்சிலர்கள் ஜி. எஸ். அரசு, மனோஜ் ,குகன், அரசு பள்ளி பி .டி .ஏ .,தலைவர் அமர்நாத், பேச்சாளர் பெரிய கோடீஸ்வரன், அரசு வழக்கறிஞர் பாண்டியன், முன்னாள் நகராட்சி தலைவர் புவியரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











Leave a Reply