டெங்கு கொசுப்புழு உருவாகாமல் தடுக்க வேலூர் மாநகராட்சி காட்பாடியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அவசரக் கூட்டம்: சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் பங்கேற்பு!

வேலூர்,டிச.6-
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவின் பேரில், வேலூர் மாநகராட்சி ஆணையர்  அறிவுறுத்தலின் பேரிலும், மாநகர நல அலுவலரின் வழிகாட்டுதலின் பேரிலும், வேலூர் மாநகராட்சி காட்பாடி மண்டலம் 1, சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் தலைமையில், காந்திநகர் மாவட்ட திட்ட அலுவலக கட்டடத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து அவசர கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பள்ளிகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ உடனடியாக காலதாமதம் செய்யாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துமாறும், ஆவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. உதவி திட்ட அலுவலர், துப்புரவு ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர்கள், 56க்கும் மேற்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த அவசர கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர் .