விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும்உதவி கலெக்டரிடம்தேமுதிக மனு

சங்கரன்கோவில், டிச.4 –
சங்கரன்கோவில் புளியங்குடி, டி.என்.புதுக்குடி, சிந்தாமணி பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் வீடு சார்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் சோலை கனகராஜ் ஆலோசனையின் பேரில் மாவட்ட அவைத்தலைவர் மதியழகன் சங்கரன்கோவில் நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை செயற்கு உறுப்பினர் அயூப் கான், தொண்டரணி மாவட்ட துணை செயலாளர் முருகன் பொறுப்பாளர் செய்யது அலி மற்றும் பன்னீர்செல்வம், சங்கர் ஆகியோர் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.