வேலூர்,டிச.4-
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஏ-பிளாக் கட்டட பகுதியில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு நுழைவு வாயில், தேசிய நெடுஞ்சாலை மத்தியிலும், நீதிமன்ற வளாகத்திலும் பொதுமக்கள் நடமாடுவது மிகவும் கடினமாகிவிட்டது. ஏனெனில் நாய்களின் தொல்லை மக்கள் மத்தியில் அதிகமான பயத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் இங்கு வருவோர், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர் அனைவரும் அதிக பயத்துடன் பயணித்து வருகின்றனர். இந்த நாய்கள் எந்த வாகனத்தையும் விடாமல், 6–7 நாய்கள் கூட்டமாக சேர்ந்து வாகனங்கள் மீதும், பொதுமக்கள் மீதும் பாய்ந்து கடித்து குதற முயல்வதும், விரட்ட முயல்வதும், விடாமல் துரத்துவதும் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வேலூர் மாநகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.











Leave a Reply