நயினாம்பட்டி காலனிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாம் தமிழர் கட்சி கோரிக்கை

திருவேங்கடம், டிச.3 –
நயினாம்பட்டி காலணியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனிடம்
கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
குருவிகுளம் ஒன்றியம் ராமலிங்கபுரம் ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்ட நயினாம் பட்டி காலனியில் நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குழாய் மற்றும் மின் மோட்டார் பழுதாகி உள்ளதால் கடந்த நான்கு மாதங்களாக மக்களுக்கு உப்பு தண்ணீர் கொடுக்கவில்லை என்றும், மேலும் குடிநீர் தொட்டியும் பழுதாகி உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பழைய நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என்றும், நயினாம் பட்டி காலடியில் கீழ்ப்புறத்தில் உள்ள மக்களுக்கு பத்தாண்டுகளாக நல்ல தண்ணீர் வழங்கவில்லை என்றும், இவை மூன்று முக்கிய பிரச்சினைகளையும் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.
அப்போது மாவட்டத் தலைவர் தங்கவேலு, மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், நிர்வாகிகள் விமல்ராஜ், வள்ளி ராஜ், மனோகரன், கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், மாரிமுத்து, அருண், ஆனந்தராஜ், காளி ராஜ், ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.